இந்தியாவில் அக். 23 கொரோனா பாதிப்பு நிலவரம்!

0
303

இந்தியாவில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 54,366 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,61,312 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 690 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,17,306 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 73,979 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 69,48,497 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இன்றைய தேதியில் 6,95,509 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் ஒரே நாளில் 14,42,722 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10,01,13,085 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleவிவசாயிகளை வழி நடத்துவது அவர்களை சுற்றி இருக்கின்ற அரசியல்வாதிகள் தான் என்பதை விவசாயிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்…! ஜேபி நட்டா கருத்து…!
Next articleதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! எச்சரிக்கும் வானிலை மையம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here