இந்தியாவின் ஒரே நாளில் 800 க்கும் மேற்பட்டோர் நோய் தொற்றினால் பலி!

Photo of author

By Sakthi

இந்தியாவின் நோய்த்தொற்று பெறவல் அதிகரித்து வந்தது அதனை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக அந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

இதனால் நாட்டில் ஒட்டுமொத்தமாக அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக, பலரும் கடுமையான பாதிப்புக்கு ஆளானவர்கள் இந்த நிலையில், பொது மக்கள் எல்லோரும் மத்திய, மாநில அரசுகளை வசை பாட தொடங்கினார்கள்.

ஆனாலும் நாட்டின் மக்களுடைய நலன் மட்டுமே முக்கியம் என்று கருதிய மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து அமலில் வைத்திருந்தது, அதன் பின்னரும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு கட்டுப்பாடுகளை வெளியிட்டது மத்திய அரசு. இதன் விளைவாக நோய் தொற்று பரதன் மெல்ல, மெல்ல குறையத் தொடங்கியது.

இதன் பிறகு இந்த நோய் தொற்றுக்கான தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது அதனை தமிழக அரசு ஒரு தனி சரித்திரம் படைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

தமிழ்நாட்டில் வாரம்தோறும் தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு பல லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது இதனால் தமிழகத்தில் நோய்த்தொற்று வெகுவாக குறைந்து விட்டது.

இதற்கிடையில், இந்தியாவில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருகின்ற சூழ்நிலையில், இந்த சமயத்தில் நோய் தொற்று தினசரி பாதிப்பு மீண்டும் ஏற்றம் காண தொடங்கியிருக்கிறது. இப்படியான சூழ்நிலையில், நேற்று முன்தினம் 13 ஆயிரத்து 453 மற்றும் நேற்றைய தினம் 16159 பதிவான நோய்த்தொற்று இன்று 16348 என்ற அளவில் கண்டறியப்பட்டிருக்கிறது.

நாட்டில் நோய் தொற்று பாதிப்பு 3 கோடியே 42 லட்சத்து 33 ஆயிரத்து 250 லிருந்து 3 கோடியே 42 லட்சத்து 46 ஆயிரத்து 150 ஆக அதிகரித்திருக்கிறது. ஒரே நாளில் 13 ஆயிரத்து 198 நபர்கள் நோய் தொற்றில் பிறந்த குணம் அடைந்து இருக்கிறார்கள். குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 14 ஆயிரத்து 444 லிருந்து 3 கோடியே 36 லட்சத்து 27 ஆயிரத்து 632 ஆக அதிகரித்திருக்கிறது.

நாடு முழுவதும் நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 314 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள், கடந்த 24 மணி நேரத்தில் 805 பேர் பலியாகியிருக்கிறார்கள் நாடு முழுவதும் நிறைவேற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 380 யாழில் இருந்து 4 லட்சத்து 57 ஆயிரத்து 191 ஆக அதிகரித்திருக்கிறது.

நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நபர்களின் விகிதம் 98 20 சதவீதமாகவும் உயிரிழப்பு விகிதம் 1.33 சதவீதமாக இருக்கிறது நாடு முழுவதும் இதுவரையில் 104.9 2 கோடி தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட இருக்கிறது. இந்தியாவில் ஒரே நாளில் 74 லட்சத்து 33 ஆயிரத்து 392 தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 73 லட்சத்து 8 ஆயிரத்து 581 தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது இந்த புள்ளிவிவரங்கள் உள்ளிட்டவற்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.