எப்பேர்ப்பட்ட பித்ரு தோஷமும் நீங்க சிவபெருமானுக்கு இதை நெய்வேத்தியம் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

எப்பேர்ப்பட்ட பித்ரு தோஷமும் நீங்க சிவபெருமானுக்கு இதை நெய்வேத்தியம் செய்யுங்கள்!!

Divya

நம் தந்தை வழியில் இறந்து போன முன்னோர்களை பித்துருக்கள் என்று அழைக்கின்றோம்.நம் பித்ருக்கள் கோபம் அடைந்தால் நமக்கு சாபம் கொடுத்துவிடுவார்கள்.

நம் முன்னோர்கள் அளிக்கும் சாபம் நாம் வணங்கும் தெய்வத்தின் அருளையும் தடுக்கும் சக்தி கொண்டது.இதன் காரணமாகவே பித்ருக்களின் சாபம் மற்றும் கோபத்தை வாங்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.ஜாதகத்தில் வலிமையான தோஷமாக உள்ள பித்ரு தோஷம் நீங்க சில பரிகாரங்கள் செய்யலாம்.

பித்ரு தோஷங்கள் நீங்க பல பரிகாரங்கள் இருந்தாலும் சக்தி வாய்ந்த ஒரு பரிகாரத்தை செய்தால் முழு பலனை பெறலாம்.பித்ரு தோஷம் இருப்பவர்களுக்கு அவை நீங்கும் வரை எந்த ஒரு பலனும் வாழ்வில் கிடைக்காது.இந்த பித்ரு தோஷம் நீங்கிய பிறகே வாழ்வில் ஒரு சந்தோஷமும் ஏற்படும்.

ஒருவர் அவரின் முன்னோர் சாபத்தை பெற்றால் நிச்சயம் முன்னோரின் புண்ணியத்தையும் பெற வேண்டியது முக்கியம்.அதேபோல் நமது முன்னோர்கள் செய்த பாவங்களாலும் நமக்கு பித்ரு தோஷம் ஏற்படும்.

அதேபோல் பித்ரு தோஷம் இருந்தால் நிச்சயம் திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் தடைபடும்.குடும்பத்தில் ஏதேனும் ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும்.இந்த பித்ரு தோஷம் தலைமுறை தாண்டியும் பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.இந்த பித்ரு தோஷம் நீங்க முன்னோர்களுக்கு அரிசி,கோதுமை போன்வற்றை நெய்வேத்தியமாக படைக்கலாம்.அதேபோல் பித்ரு தோஷத்தில் இருந்து மீள பூஜை பரிகாரம் செய்யலாம்.

அதேபோல் பித்ரு தோஷம் நீங்க சிவபெருமானை வழிபட வேண்டும்.சிவபெருமானுக்கு கருப்பு எள்ளை நெய்வேத்தியமாக படைத்து வழிபட்டால் முன்னோரர்களின் பித்ரு சாபம் நீங்கும்.சிவபெருமானுக்கு வில்வ இலை,தேன்,பால் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைப்பது போல் கருப்பு எள்ளை நெய்வேத்தியம்
படைத்தால் பித்ரு தோஷம் நீங்கும்.