சென்னையில் அலுவலக உதவியாளர் பணி!! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு!!

Photo of author

By Divya

சென்னையில் அலுவலக உதவியாளர் பணி!! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு!!

Divya

தலைநகர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்து சமய அறநிலைக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக இருக்கின்ற அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

வேலை வகை: தமிழக அரசு பணி

நிறுவனம்: இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் அலுவலகம்(சென்னை)

பதவி:

**அலுவலக உதவியாளர் – 06

கல்வித் தகுதி:

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதோடு தமிழில் நன்றாக எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர் இந்து மதத்தை கடைப்பிப்பவராக இருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.58,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகப்பட்ச வயது 37 என்று என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை:

**நேர்காணல்

இந்த பணிகளுக்கு நேர்காணல் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

தகுதி,விருப்பம் இருப்பவர்கள் http://hrce.tn.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தியிட்டு தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாள் மே 28 ஆகும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

ஆணையர்,இந்து சமய அறநிலைத்துறை,எண்.119,உத்தமர் காந்தி சாலை,நுங்கம்பாக்கம்,சென்னை – 600 034.