இளம் பெண்களை நிர்வாணமாக்கி சோதனையிட்ட அதிகாரிகள்! எதற்காக தெரியுமா?

0
117

கத்தாரில் விமானத்தில் பயணிக்கவிருந்த இளம் பெண்களை நிர்வாணமாக்கி சோதனை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சோதனை எதற்காக என்றால் கத்தாரில் விமான நிலையத்தில் கழிவறையில் உயிருடன் பச்சிளம் குழந்தை ஒன்று வீசப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்கவே சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

வழக்கம்போல் விமான நிலையத்தின் கழிவறையை சுத்தம் செய்து உள்ள பணியாளர்கள் பச்சிளம் குழந்தை கழிவறையில் கிடப்பதை கண்டு அவர்களின் மேலதிகாரிகளுக்கு விவரத்தை சொல்லி உள்ளனர்.

தகவல் அறிந்து அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் விமான நிலையத்தில் உள்ளவர்களிடம் விசாரணை செய்துள்ளனர். விசாரணை செய்தும் எந்த ஒரு தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணிக்கவிருந்த ஆஸ்திரேலியர்கள் உள்பட 13 பேர் பெண்களை நிர்வாணமாக்கி சோதனை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக எதற்காக நிர்வாணமாக பரிசோதனை நடத்தப்படுகிறது என்று பயணிகளுக்கு தெரிவிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களை நிர்வாணமாக பரிசோதனை செய்ததற்கு ஆஸ்திரேலிய அரசு கத்தார் அரசுக்கு பெரும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், கழிப்பறையில் மீட்கப்பட்ட அந்த குழந்தைக்கு சிறப்பான கவனிப்புகள் அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பரிசோதனை குறித்து கத்தார் விமான சேவை இது தொடர்பான எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 

Previous articleஅடுத்தகட்ட ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு…! நோய்தொற்று அதிகமானதால் நடவடிக்கை…!
Next articleஇ-பாஸ் ரத்து..!! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!