மாஸ்டர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கடுப்பான ரசிகர்கள் !

Photo of author

By Parthipan K

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் சூர்யாவின் சூரரைப்போற்று ஆகிய இரு படங்களும் ஒட்டிடியில் வெளியானதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் படமாக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் ஓட்டிடியில் வெளியாகப் போவதாக தகவல்கள் சில மாதங்களாக வெளியாகி வருகின்றன.

ஆனால் மாஸ்டர் படம் கண்டிப்பாக ஓட்டிடி தளங்களில் வெளியாகாது என தயாரிப்பாளர்களும் திரைப்படகுழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் மீண்டும் மீண்டும் இந்த செய்திகள் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் திரைப்படம் மாஸ்டர். மாளவிகா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத். இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமார் மற்றும் சேவியர் பிரிட்டோ ஆகியோர் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் ஒன்றாம் தேதி வெளியிட வேண்டிய இப்படம்  கொரோனா காரணமாக இதுவரை வெளியாக முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தீபாவளி தினத்தன்று மாஸ்டர் படம் வெளியாக இருப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்தன.

ஆனால் இவை எல்லாவற்றையும் பொய்யாக்கும் விதமாக தற்போது ஊட்டியில் ஓட்டிடியில மாஸ்டர் படம் வெளியாகப் போவதாக தகவல்கள வெளியாகின்றன. பிரபல முன்னணி பத்திரிக்கை நிறுவனமான புதிய தலைமுறை சேனலில் மாஸ்டர் படம் அமேசான் தளத்தில் வெளியாவது உறுதி என்பதை போல ஒரு செய்தி வெளியாகி விஜய் ரசிகர்களை பெரும் கடுப்பில் மூழ்கடித்துள்ளது. இதனால் மீண்டும் மாஸ்டர் படத்தைப் பற்றி தவறான தகவல்களும் பொய்யான தகவல்களும் பகிரப்பட்ட வருவதாக கோலிவுட்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.