தமிழகத்தில் பொது முடக்க தளர்வுகள் குறித்து இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு !!

0
135

தமிழகத்தில் பொது முடக்க தளர்வுகள் குறித்து இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு !!

தமிழகத்தில் பொது முடக்க தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் நாளையோடு மூன்றாம் கட்ட தளர்வுகள் நிறைவடைய உள்ள நிலையில்,நான்காம் கட்ட தளர்வுகள் குறித்து நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் சில வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டது .அதில் பல்வேறு அம்சங்களுக்கு அனுமதியளித்துள்ள மத்திய அமைச்சகம் ,சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

திறந்த வெளி திரையரங்கம் , மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றை மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் ,பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த மாதமும் தடைவிதித்துள்ளது. அதேபோல ஊரடங்கு குறித்த முடிவுகள் மத்திய அரசின் ஆலோசனை பெற்று மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

இதனால் தமிழகத்திலும் நான்காம் கட்ட தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் மத்திய அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறை சார்ந்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு இனி எந்த மாதிரி இருக்கும் என்று அறிவிப்புகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இ பாஸ் முறை ரத்து செய்யப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Previous articleமதுரை பேராசிரியர் கண்டுபிடிப்பு: ‘சிமென்ட் கான்கிரீட்’டிற்கு மாற்றாக ‘பிளாஸ்டோன் பிளாக்’..! மத்திய அரசு காப்புரிமை!!
Next article“அரியர் தேர்வுக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மட்டும் சொம்பயா?” என்ற பாணியில் ஸ்டாலின் விமர்சனம்