தமிழகத்தில் அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கை பாவையாக மாறி உள்ளார்கள்! அண்ணாமலை குற்றச்சாட்டு!

0
132

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதே போல அதிமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றாலும் அதிமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் இருந்தாலும் அந்த கட்சி எதிர்க்கட்சியாக சரியான முறையில் செயல்படவில்லை என்று தமிழகம் முழுவதும் பரவலாக ஒரு கருத்து இருந்து வருகிறது.

தொடக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்யப்பட்ட போது ஆளும் கட்சியினர் அவரைக் கண்டு சற்றே அஞ்சினர் என்று சொன்னால் அது மிகையாகாது ஆனால் திமுக அதிகாரத்திற்கு வந்த பிறகு தன்னுடைய அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அதிமுகவை தன்னுடைய கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பது தான் உண்மை.

ஆனால் தமிழகத்தில் சமீப காலமாக பாஜக வெகுவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த கட்சி விடும் அறிக்கைகள் மற்றும் அந்த கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்டோர் வழங்கும் பேட்டிகள் உள்ளிட்டவை ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருகிறது.

ஆனால் மத்தியில் ஆட்சியில் இருப்பதாலோ என்னவோ திமுக பாஜக மீது அதிமுக அளவிற்கு கடுமை காட்டவில்லை என்றே சொல்லலாம். பாஜகவை பொறுத்தவரையில் தமிழகத்தில் வளர்ச்சி அடைய வேண்டும் என்று மாபெரும் தாகம் கொண்டு இருக்கிறது. ஆகவே அந்த கட்சி பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் திமுக இந்த கட்சியின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் அந்த கட்சியின் மீது ஏதாவது நடவடிக்கை என்று எடுத்து விட்டால் அந்த நடவடிக்கையை அவர்களின் வளர்ச்சிக்கு காரணமாகி விடக்கூடாது என்பதில் திமுக கவனமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தில் மக்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத ஆட்சி நடைபெறுகிறது என்று மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, தமிழகத்திலும் முக்கிய காலகட்டத்தில் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்தார். தேசியம், தெய்வீகம் மிக்க கருத்துக்களை தெரிவித்தார். தற்போதைய நிலையில் தமிழக மண்ணிற்கு அவர் மீண்டும் தேவை என்ற நிலை வந்திருக்கிறது. தமிழக அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கை பாவையாக மாறியுள்ளார்கள்.

அதிலும் குறிப்பாக ஆளும் கட்சி தற்சமயம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் எதை வேண்டுமானாலும் மறைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது மக்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத அளவுக்கு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக தான் தேவர் மீண்டும் தேவைப்படுகிறார். அவருடைய கொள்கை சித்தாந்தத்தை நிச்சயமாக பாஜக செயல்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்குச் சென்ற அண்ணாமலை அங்கே தெரிவித்ததாவது, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டுவதில் பாஜகவிற்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை. அதற்கான நடவடிக்கைகளை தமிழக பாஜக மேற்கொண்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் போது சமுதாய அமைப்பினரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

அதேபோல தமிழக காவல்துறையினர் கடினமாக உழைக்கக் கூடியவர்கள் அவர்களைப் பற்றி அவதூறு பரப்பவதாக தெரிவிப்பது உண்மைக்கு புறம்பானது. காவல்துறையினர் வழங்கிய அறிக்கை பதிலுக்கு பதில் வரிக்கு வரி இரண்டு மணி நேரத்தில் அறிக்கை வழங்குகிறேன். உயர் அதிகாரிகள் சிலரின் செயல்பாடுகள் தொடர்பாக தான் குறிப்பிட்டிருந்தேன் என்று தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

Previous articleநவம்பர் மாதத்தில் தேசிய மற்றும் தனியார் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை!
Next articleடேவிட் மில்லர் அபார பேட்டிங்… மோசமான பீல்டிங்கால் போராடி தோற்ற இந்தியா…!