இந்த ட்ரிக் தெரிந்தால்.. EMERGENCY நேரத்தில் வேறொருவர் பதிவு செய்த ரயில் டிக்கெட்டில் நீங்கள் பயணம் செய்யலாம்!!
இந்தியாவில் நெடுந்தொலைவு பயணிகளுக்கு ரயில் போக்குவரத்து பயன்படுத்தப்படுகிறது.இந்த ரயில் போக்குவரத்து நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இதர போக்குவரத்தை காட்டிலும் ரயில் போக்குவரத்து பயணம் செய்ய பாதுகாப்பானது.அது மட்டுமின்றி பயணத்திற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு என்பதினால் பெரும்பாலான மக்கள் இந்த ரயில் போக்குவரத்தை தேர்வு செய்கின்றனர்.
கடந்த காலங்களில் ரயில் பயணம் மேற்கொள்ள ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை இருந்தது.இதனால் கூட்டம் அதிகமாக இருக்கும் பொழுது டிக்கெட் எடுப்பதற்கு மக்கள் அவதியடைந்து வந்தனர்.சில நேரம் ரயில் பயணத்தை தவற விட்டவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் தற்பொழுது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது சுலபமாகி விட்டது.முன்பதிவு செய்தவரின் பெயர்,விவரங்கள்,இருக்கை உள்ளிட்ட தகவல் அந்த டிக்கெட்டில் இடம் பெற்றிருக்கும்.
ஆனால் ஒரு சிலரால் ரயிலுக்கு முன்பதிவு செய்துவிட்டு சில காரணங்களால் பயணிக்க முடியாமல் போய்விடுகிறது.இதனால் தன்னுடைய டிக்கெட்டை ரத்து செய்து விட்டு பயணம் மேற்கொள்ள இருப்பவருக்கு இறுதி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் போய்விடுகிறது.
ஆனால் நாம் முன்பதிவு செய்த டிக்கெட்டில் வேறொருவர் பயணிக்க முடியும் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.உங்கள் பயணத்திற்கு முன்பதிவு செய்துவிட்டு ஏதேனும் ஓர் காரணத்தினால் பயணிக்க முடியாமல் வேறொருவருக்கு அதை மாற்ற வேண்டுமென்றால் நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டின் பிரண்ட் அவுட்டை அருகில் உள்ள ரயில் நிலைய முன்பதிவு கவுண்டரில் கொடுக்கவும்.பின்னர் உங்களுக்கு பதில் யார் பயணம் மேற்கொள்ள இருக்கிறாரோ அவரின் ஆதார் அல்லது வோட்டர் ஐடி சான்று கொடுத்து அவரின் பெயருக்கு டிக்கெட்டை மாற்றலாம்.இதை ஒரு முறை மற்றுமே மாற்ற முடியும்.அது மட்டுமின்றி 48 மணி நேரத்திற்கு முன்பாக இதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.