அட.. இதனை விஜய் மாற்றிக் கொள்ள வேண்டும்!! மனம் விட்டு பேசிய திரிஷா!!

Photo of author

By Gayathri

நடிகரும் கட்சித் தலைவருமான விஜய் அவர்கள் குறித்தும் நடிகை திரிஷா அவர்கள் குறித்தும் பல்வேறு விதமான கிசு கிசுக்கள் பேசப்பட்டு வருகிறது. இந்த கிசுகிசு ஆனது ஒரு பக்கம் பேசப்பட்டு வந்தாலும் ரசிகர்கள் இடையே இவர்களுடைய காம்போ ஹிட்டாகி கொண்டு தான் இருக்கிறது.

இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில், சினிமா துறையை விட்டு நடிகை திரிஷா அவர்கள் விலகி அரசியலில் இணைய இருப்பதால் தகவல்கள் வெளியாக்கி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை நடிகை திரிஷாவின் உடைய தாயாரான உமா அவர்கள் மறுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நடிகை திரிஷா அவர்கள் விஜய் குறித்து பேசிய பேட்டி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது. அதன் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

நடிகை திரிஷா அவர்கள் காபி வித் அணு நிகழ்ச்சியில் என்னை எப்பொழுதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிண்டல் செய்வது நடிகர் சிம்பு தான் என்றும் விஜய் அவர்கள் எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ஒரு பெரிய சுவரினை பார்த்தபடி அமைதியாகவே நற்றல் விஜய் அவர்கள் அமர்ந்திருப்பார் என்றும் ஏதாவது பிரச்சனை என்றால் கூட மிகவும் அமைதியாக இருப்பார் என்றும் அதனை நடிகர் விஜய் அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் நடிகை திரிஷா அவர்கள் தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.