வீட்டில் பிரச்சனை, வேலையில் பிரச்சனை, வெளியில் பிரச்சனை, சொந்தத்தால் பிரச்சனை என பல பிரச்சனைகளை போட்டு குழப்பிக் கொள்ளும் நாம் அந்தப் பிரச்சினைகளில் இருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் வெளியில் வர கீழே குறிப்பிட்டுள்ள ஐந்து படங்களை மட்டும் பார்த்தால் போதும். வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து மன அழுத்தமும் மறைந்து மனம் லேசாகிவிடும்.
✓ பண்ணையாரும் பத்மினியும் :-
2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மிகவும் அழகான மற்றும் ஆழமான கணவன் மனைவியின் உடைய காதலை வெளிப்படுத்துவதாகவும் உணர்ச்சிகளை ஒருவருக்கொருவர் எவ்வாறு மதித்து வெளிப்படுத்துகின்றனர் என்பதை மிகவும் எளிதாகவும் அழகாகவும் இத்திரைப்படத்தில் காணலாம். வயதான பின்பும் கூட தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற நினைக்கும் பண்ணையார் கதாபாத்திரமும் அவரது மனைவி கதாபாத்திரமும் இத்திரைப்படத்தின் ஓர் அழகான பரிணாமம்.
✓ திருச்சிற்றம்பலம் :-
அழகான நட்புடன் கூடிய காதலை வெளிப்படுத்தக்கூடிய திரைப்படமாக திரைப்படம் விளங்குகிறது. 2022 ஆம் ஆண்டு நடைபெறும் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண் பெண்ணிற்கிடையே இருக்கக்கூடிய ஆழமான நட்பினையும் நட்பினால் உருவான காதலையும் இந்தவித வன்முறையும் இன்றி அழகாக காட்டுகிறது.
✓ 96 :-
நடிகர் விஜய் சேதுபதி நடித்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 10 ஆம் வகுப்பு பயிலும் பொழுது தன்னுடைய வாழ்வில் வந்த முதல் காதலை நினைத்து தன் வாழ்நாளை கழிப்பவராக ஹீரோயின் இருக்கும்பொழுது 96 ஆம் ஆண்டு பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரும் சந்திக்கும் பொழுது தன் காதலியை நீண்ட வருடங்கள் கழித்து பார்த்த ஒரு காதலனின் உணர்வை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறது.
✓ மேயாத மான் :-
2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல் மற்றும் நகைச்சுவை நட்பு என அனைத்தையும் சுவை மிக்க உணர்வுகளால் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. திரைப்படத்தை பார்ப்பதன் மூலம் நகைச்சுவையுடன் கூடிய காதல் உணர்வுகளை எளிமையாக ரசிக்கலாம்.
✓ லப்பர் பந்து :-
சமீபத்தில் வெளியான இத்திரைப்படம் எளிமையான மற்றும் எதார்த்தமான கதையோட்டத்தில் அனைவரையும் இழுத்து செல்கிறது. திரைப்படத்தை பார்க்கும் பொழுது நம்முடைய சிறுவயதில் நிகழ்ந்த பல விஷயங்கள் நினைவுக்கு வருவதுடன் அன்பான மற்றும் வீட்டில் நடக்கக்கூடிய சின்ன சின்ன சண்டைகள் காதலாக மாறுவதை உணர முடியும்.