அட இப்படியுமாடா பண்ணுவீங்க!! மொக்க கதையை ஓட்ட.. புதிய ட்ரெண்ட்!!

Photo of author

By Gayathri

அட இப்படியுமாடா பண்ணுவீங்க!! மொக்க கதையை ஓட்ட.. புதிய ட்ரெண்ட்!!

Gayathri

Oh, you're doing something like this!! Telling a story.. a new trend!!

இப்பொழுது எல்லாம் தங்களுடைய படம் வெற்றி கொள்ள வேண்டும் என இயக்குனர்கள் நினைப்பதை விட போட்ட பணத்தை எடுத்து விட்டால் போதும் என நினைப்பதே மிகப்பெரிய விஷயமாக உள்ளது. முதலாம் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பாக நிருபர்களுக்கு போட்டுக்காட்டிய பின்பு அவர்கள் கொடுக்கக்கூடிய உத்தரவாதத்தின் பெயரில் படங்கள் ஓடின. ஆனால் இப்பொழுது காலகட்டமே வேறு என்பதற்கு ஏற்றவாறு புதிய ட்ரெண்ட் ஒன்று உருவாக்கியுள்ளது.

ஒரு படம் திரையிடப்படுகிறது என்றால் அதன் மூலம் அந்த படத்தை சார்ந்த திரைத்துறையினர் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் நடிகைகள் என அனைவரும் பயன்பெறுவது தாண்டி இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் வெளியிடப்படும் பொழுது அதனோடு கூடவே இலட்சக்கணக்கான இன்ஃப்லுவென்ஸர்களும் சம்பாதிக்க தொடங்கிவிட்டனர். இதன் மூலம் தரமற்ற திரைப்படம் கூட தரமான திரைப்படம் போல் மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

அதிலும் கொடுமையான விஷயம் என்னவென்றால், தங்களுடைய படம் எப்படி இருக்கிறது என்ற விமர்சனங்களை கூட திரைப்பட துறையினர் பணம் கொடுத்து வெளிப்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சமீபத்தில் ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அந்த திரைப்படத்திற்கு உரியவர்கள் மட்டுமல்லாது மற்ற திரைப்படங்களின் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அவர்களின் நண்பர்கள் என பலரையும் அழைத்து மேடையில் வரிசையாக சார் போட்டு அமர வைத்து படத்தின் இசை குறித்த படத்தின் கதை குறித்தோ பேசாமல் தங்களுடைய பழைய நினைவுகள் என்ற பெயரில் தேவையற்றதையும் பேசி நேரத்தை வீணடிக்கின்றனர்.

அவர்களைத் தொடர்ந்து இன்ஸ்டா இன்புளுவென்சர்கள், இவர்கள் நன்றாக இல்லாத படத்தை கூட ஹைப் ஏற்றி இயக்குனர்கள் போட்ட முதலீட்டை மீட்டு எடுப்பதற்கு உதவி புரிபவர்களாக அவர்களுடைய பணிகளை செய்து வருகின்றன.

இது குறித்த மூத்த சினிமா பத்திரிக்கையாளர் தெரிவித்திருப்பதாவது :-

இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு மாதத்திற்கு 20 படங்கள் வெளிவருகிறது என்றால் அவற்றில் ஒன்றோ இரண்டோ தான் வெற்றி திரைப்படமாக அமைகிறது என குறிப்பிட்ட அவர், இப்பொழுதெல்லாம் நிருபர்களை அழைத்து படங்களை போட்டு காட்டுவதில்லை என்றும் ஏனென்றால் அவர்கள் உண்மையை வெளிப்படையாக தெரிவிப்பதால் தங்களுடைய படம் ஓடாத சூழல் ஏற்படுவதால் பணம் கொடுத்து தங்களுடைய படம் குறித்த கருத்துக்களை வெளியிட இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்களை பயன்படுத்துவதாக தெரிவித்ததோடு, தமிழ் சினிமாவின் எதிர்கால நிலையை யோசிக்கும் பொழுது வருத்தமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.