Biometric registration:வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இறுதி செய்ய பயோமெட்ரிக் பதிவு விரைவில் முடிக்க எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டை பொறுத்தவரை நாடு முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு உள்ளவர்கள் சுமார் 33 கோடி குடும்பங்கள் இருக்கின்றன. மேலும் வீட்டு உபயோக சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு உஜ்வாலா திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக ரூ.200 மானியம் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
மேலும் இந்த திட்டமானது கடந்த 2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் இலவசமாக சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் முதல் சிலிண்டர் கொடுக்கப்பட்டது. தற்போது அனைத்து மக்களும் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் முறையாக இணைப்பினை பதிவு செய்து இருக்கிறார்களா, சிலிண்டர் பயனர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது பற்றியும்.
உண்மையான வாடிக்கையாளர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளவும் ஒரு புதிய முறையை மத்திய அரசின் ஒப்புதல் அடிப்படையில் செயல் படுத்தி வருகிறது கேஸ் நிறுவனங்கள். அதாவது வாடிக்கையாளர்கள் பயோமெட்ரிக் பதிவின் மூலம் பதிவு செய்து கேஸ் சிலிண்டர்களை வாங்க வேண்டும். மேலும் பயோமெட்ரிக் முறையில் தங்கள் சுய விவரங்களை கொடுக்க வேண்டும்.
இதனை நவம்பர்-30 ஆம் தேதிக்குள் இந்த பதிவை முடிக்க எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் பதிவை வாடிக்கையாளர்கள் செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் விநியோகம் முடக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.