ஆயில் ஸ்கின்னை ப்ரைட்டாக்க வேண்டுமா? அப்போ தினமும் செய்யுங்க
முகத்தில் எண்ணெய் வடிந்தால் நம் அழகிற்கு பாதிப்பு வந்து விடும்.நாம் எவ்வளவு மேக்கப் போட்டாலும் சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பிசுக்கு அவற்றை கெடுத்துவிடும்.ஆயில் ஸ்கின்னால் நமது தன்னம்பிக்கை குறைந்துவிடும்.எனவே இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள நேச்சுரல் ரெமிடியை ட்ரை செய்து வாருங்கள்.
எண்ணெய் சருமத்திற்கு தீர்வு..
புதினா
எலுமிச்சை சாறு
வாழைப்பழம்
ஒரு பாத்திரத்தில் கால் கப் புதினா இலை சேர்த்து நன்கு அலசி சுத்தம் செய்யவும்.பிறகு ஒரு மீடியம் சைஸ் வாழைப்பழத்தை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.இந்த இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.
பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம் செய்து விட்டு அரைத்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்யவும்.
இதை 30 நிமிடங்கள் முகத்தில் வைத்திருந்த பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும்.இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் எண்ணெய் பசை ஏற்படுவது கட்டுப்படும்.
எண்ணெய் சருமத்திற்கு தீர்வு…
புதினா
வெள்ளரி பிஞ்சு
தேன்
ஒரு பாத்திரத்தில் கால் கப் புதினா இலை சேர்த்து நன்கு அலசி சுத்தம் செய்யவும்.பிறகு ஒரு மீடியம் சைஸ் வெள்ளரி பிஞ்சை பொடியாக நறுக்கி கொள்ளவும்.இந்த இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி சிறிதளவு தேன் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம் செய்து அரைத்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்யவும்.இதை 30 நிமிடங்கள் முகத்தில் வைத்திருந்த பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும்.இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் எண்ணெய் பசை ஏற்படுவது கட்டுப்படும்.
எண்ணெய் சருமத்திற்கு தீர்வு…
முட்டையின் வெள்ளை கரு
எலுமிச்சை சாறு
அவல்
தேன்
ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கரு சேர்த்து நுரை வரும் பதத்திற்கு கலக்கி கொள்ளவும்.
பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அவல்,ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.இதை முகம் முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.