சரக்கு ஏற்றி சென்ற கப்பலில் எண்ணெய் கசிவு!! பரபரப்பில் சென்னை துறைமுகம்?!.

0
190
Oil spill on cargo ship!! Chennai port in a frenzy?!
Oil spill on cargo ship!! Chennai port in a frenzy?!

சரக்கு ஏற்றி சென்ற கப்பலில் எண்ணெய் கசிவு!! பரபரப்பில் சென்னை துறைமுகம்?!.

இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு தேவையான எண்ணெய் மணலியிலுள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து குழாய் வழியாக சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.பின்னர் எண்ணெயை அங்கிருந்து கப்பல் மூலம் ஏற்றி சென்றனர்.இதனை எண்ணூருக்கு எடுத்து சென்று அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்து வருகின்றது.

அந்த வகையில் வழக்கமாக இதற்கான பணியில் ஈடுபட்டு வரும் ஹரி ஆனந்த் என்ற பெயரிலான தனியார் நிறுவனத்தின் கப்பல் மணலியில் இருந்து குழாய் வழியாக கொண்டு வரப்படும். இந்த எண்ணெயை ஏற்றுவதற்காக சென்னை துறைமுகத்திற்கு நேற்று காலை வந்தது.குழாயில் இருந்து கப்பலில் எண்ணெயை ஏற்றுவதற்கான பணிகள் ஆரமிர்க்கும் நேரத்தில் கப்பலிருந்து எண்ணெய் கசிந்ததை பார்த்து கப்பல் பணியாளர்கள் உடனடியாக அந்த பணியை நிறுத்திவிட்டு எண்ணெய் கசிவு ஏற்படும் இடத்தை சோதனை செய்தபோது கப்பலின் எரிபொருள் டேங்க்கிலிருந்து எண்ணெய் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து துறைமுக அதிகாரிகள்,கப்பல் பணியாளர்கள், தீயணைப்புத்துறை, கடலோர காவல்படை, சுற்றுச்சூழல் துறை மற்றும் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எண்ணெய் கசிந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர் உடனடியாக களப்பணியில் ஈடுபட்ட அவர்கள் நேற்று காலை 6 மணி முதல் 10 மணிக்குள் அனைத்து பணிகளும் எதிற்கொள்ளப்பட்டு கடலில் கசிந்து இருந்த எரிபொருள் எண்ணெயை மிக விரைவில் அகற்றிவிட்டனர்.

எதனால் இப்பதிப்பு ஏற்பட்டது என சென்னை துறைமுக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு இரு கப்பல்கள் மோதியதில் ஒரு கப்பலில் கொண்டு செல்லப்பட்ட கச்சா எண்ணெய் முற்றிலுமாக கடலில் கலந்தது. இதனால் சுறா, மீன்கள், ஆமைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் பரிதாபமாக உயிரிழந்தது.கடலில் கலந்த எண்ணெயை அகற்றும் பணி பல நாள் போராட்டத்திற்கு பிறகு அகற்றப்பட்டது. இதைதொடர்ந்து கப்பலின் எரிபொருள் எண்ணெய் கசிந்த செய்தி நேற்று அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Previous articleபிசாசு 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் … ஆண்ட்ரியா வெளியிட்ட வைரல் வீடியோ
Next articleகுட் நியூஸ்! நீங்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறீர்களா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு