முகத்தில் ஆயில் வழியுதா? வேப்பிலை இருந்தால் 100% எண்ணெய் பிசுக்கு நீக்கிவிடலாம்!!

0
45

சருமம் பொலிவாக இருக்க வேண்டுமென்ற ஆசை அனைவருக்கும் இருக்கிறது.ஆனால் எண்ணெய் பிசுக்கு,அழுக்கு,டெட் செல்களால் சருமம் பொலிவற்று போகிறது.சருமத் துளைகளில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் அடியோடு நீங்கி பொலிவான சருமத்தை பெற வேப்பிலை மற்றும் தேன் கலந்த பேஸ் பேக் ட்ரை பண்ணுங்க.

சரும பிரச்சனைகளுக்கு வேப்பிலை சிறந்த தீர்வாக உள்ளது.வேப்பிலையில் உள்ள இயற்கை ஆற்றல் எண்ணெய் பிசுக்கை போக்கி மிருதுவாக வைக்கிறது.

எண்ணெய் பிசுக்கை போக்கும் வேப்பிலை பேஸ் பேக் தயாரிப்பு முறை:

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை – ஒரு கொத்து
2)தேன் – ஒரு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

முதலில் நீங்கள் ஒரு கொத்து வேப்பிலையை பறித்து எடுத்து வர வேண்டும்.ஒருவேளை உங்கள் முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிகிறது என்றால் நீங்கள் ஒரு கைப்பிடி வேப்பிலை சேகரித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த வேப்பிலையை தண்ணீர் கொண்டு நன்றாக அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு மிக்சர் ஜாரை சுத்தம் செய்து வேப்பிலையை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி தேவையான அளவு தேன் கலக்க வேண்டும்.பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இப்பொழுது தயாராக வைத்துள்ள வேப்பிலை பேஸ்ட்டை முகம் முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு நன்றாக உலரவிட வேண்டும்.

பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி துடைக்கவும்.இந்த வேப்பிலை பேஸ் பேக் பயன்படுத்திய பிறகு முகத்தை பாருங்கள்.நிச்சயம் எண்ணெய் பிசுக்கு நீங்கி சருமம் ஒருவித பொலிவுடன் காட்சி தரும்.

வேப்பிலையுடன் மஞ்சள் கலந்து முகத்திற்கு பயன்படுத்தி வந்தாலும் எண்ணெய் சரும பிரச்சனைக்கு பலன் கிடைக்கும்.அதேபோல் வீட்டு முறையில் வேப்பிலை சோப் தயாரித்து பயன்படுத்தி வந்தால் சருமம் சார்ந்த பாதிப்புகள் அனைத்தும் எளிதில் அகலும்.வேப்பிலையை அரைத்து ஜூஸ் செய்து பருகி வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.

Previous articleபொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முன் இதை மட்டும் மறக்காமல் செய்துவிடுங்கள்!!
Next articleஅரிசி கழுவிய நீர் போதும்!! முடி உதிர்ந்த இடத்தில் சீக்கிரம் பேபி ஹேர் வளர்ந்துவிடும்!!