காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி !!

Photo of author

By Parthipan K

காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி !!

Parthipan K

பாலக்கோடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்கோடு மாவட்டம் அட்டைப்பெட்டியில் காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.சோலையூரை சேர்ந்த 70 வயது உடைய பழங்குடி முதியவர் ஒருவர் நேற்று விறகு சேகரிப்பதற்காக அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றார்.

காது கேட்காத மாற்றுத்திறனாளியான அவர் , காட்டிய வழியில் வருவதை அறிய இயலவில்லை.தப்பியோட முடியாமல் சிக்கியவரை, யானை மிதித்தும் தந்தத்தால் குத்தியும் கொன்றது.இதனால் சம்பவ இடத்திலேயே முதியவர் உயிரிழந்துள்ளார்.

பின்பு சில மணி நேரம் அப்பகுதியில் யானை முகாமிட்டதால் ,ஊர் மக்கள் யாரும் அருகில் செல்ல இயலவில்லை.பின்பு வனப்பகுதியில் மற்றும் காவல்துறையினர் வந்து உடலை மீட்டனர்.