மருத்துவ கட்டணம் கட்டாததால் முதியவரை படுக்கையில் கட்டி வைத்த மருத்துவமனை

0
76

தனியார் மருத்துவமனையில் கட்டண கொள்ளையை பற்றி நாம் நிறைய கேள்வி பட்டிருப்போம்.

அப்படிமத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த 80 வயது முதியவரை உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது அவரது குடும்பத்தினர் 5 ஆயிரம் ரூபாய் முன் பணமாக செலுத்தியுள்ள்னர்.

அவர் சிகிச்சை பெற்று குணமடைந்ததையடுத்து மேலும் 11 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு மருத்துவ மனை நிர்வாகம் கூறியுள்ளது. ஏழ்மையின் காரணமாக அவர் குடும்பத்தினரால் அந்த தொகையை செலுத்த முடியவில்லை.

இதனால் அந்த முதியவரை கட்டிலுடன் இனைத்து கட்டி போட்டுள்ளது மருத்துவ மனை நிர்வாகம். பணத்தை செலுத்திவிட்டு அவரை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளது.

இந்த புகைப்படம் இனையதளத்தில் வேகமாக பரவ, பரபரப்பாக மாறியது. இதனையடுத்து விளக்கமளித்த மருத்துவமனை நிர்வாகம் முதியவர் கீழே விழாமல் தடுப்பதற்கே கட்டி போட்டதாக காரணம் கூறியது. ஆனால் அந்த முதியவரின் மகனோ, தங்களால் பணம் கட்ட முடியாதாதாலேயே தங்கள் தந்தையை மருத்துவமனை கட்டி வைத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த் விவகாரம் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் கவனத்திற்க்கு வர, இந்த விவகார்த்தில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு குழு ஒன்றை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று சாஜாபுர் மாவட்ட ஆட்சிய விரேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K