மெக்சிகோவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஹெலிகாப்டர் மூலம் கடலில் வீசப்படுவதாக வந்த காணொளியின் உண்மை தகவல் கிடைத்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவி பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சடலங்களை வைக்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மெக்சிகோவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை ஹெலிகாப்டர் மூலம் கடல்களில் வீசப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.இந்த காணொளியில் ஹெலிகாப்டரில் இருந்து உடல்களை வீசப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோவிற்கு தலைப்பாக மெக்சிகோவில் தொற்றினால் உயிரிழந்தவர்கள் கடலில் வீச படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த காணொளியை ஆய்வு செய்ததில் அந்த வீடியோவானது கடந்த 2018 ஆம் ஆண்டு யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது.மேலும் அந்த வீடியோவில் கீழே விழும் உடல்கள் சடலங்கள் இல்லை என்றும் அது வான்வெளி சாகசம் செய்யும் வீரர்கள் என்ற உண்மை வெளியாகியுள்ளது.இதை அந்த வான்வெளி வீரர்கள் சாகசம் செய்யும் போது எடுக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.