இந்தியாவில் ஊடுருவிய ஒமிக்ரான் வைரஸ்! உஷாரான தமிழக அரசு!

Photo of author

By Sakthi

உலகம் முழுவதும் கொரோனா அதிர்வலைகள் குறைந்து இருக்கின்ற சூழ்நிலையில், தற்போது இந்த கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று ஒமிக்ரான் வைரஸ் ஆக பரவ ஆரம்பித்து இருக்கிறது. நம்முடைய அண்டை மாநிலமான கர்நாடகாவில் இரண்டு பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது இதன் காரணமாக, பொதுமக்கள் அச்சம் அடைந்து இருக்கிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அந்த கண்காணிப்பு பணியின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசு தலைமை மருத்துவமனைகளில் இந்த தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு அமைக்கும் பணி மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை, திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருச்சி, சேலம், தஞ்சை, உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பு வார்டு அமைக்கும் பணி மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.

குறைந்தபட்சமான படுக்கைகளுடன் இந்த வார்டு அமைக்கப்பட்டு வருகின்றது 24 மணிநேரமும் ஆக்ஸிஜன் படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டு இருக்கிறது அதே போல நவீன ஆய்வகம், நுட்புனர்கள், விற்பன்னர்கள் தயார்நிலையில் இருக்கின்றன இந்த வார்டில் அனுமதிக்கப்பட்டு இருப்பவர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். இதற்கு தேவையான மருத்துவ குழுவினரும் தயாராக இருக்கிறார்கள், நவீன மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளவும், உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவில் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.