நவம்பர் 1ஆம் தேதி இந்த மாவட்டத்தில் அரசு அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
நவம்பர் ஒன்றாம் தேதி அன்று தான் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது.அதனால் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் நவம்பர் ஒன்றாம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் ,அனைத்து கல்வி நிறுவனங்கள் என அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 12ஆம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாள் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த நாளை உள்ளூர் விடுமுறை செலாவணிமுறி சட்டத்தின்படி அறிவிக்கப்படவில்லை என்பதால் ஒன்றாம் தேதி குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சமந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் வகையில் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.