வரும் 6 ஆம் தேதி இங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

0
154
on-the-6th-it-is-a-holiday-for-schools-and-colleges-the-order-issued-by-the-district-collector
on-the-6th-it-is-a-holiday-for-schools-and-colleges-the-order-issued-by-the-district-collector

வரும் 6 ஆம் தேதி இங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக்கொண்டு புயலாக மாறியது.

அதனால் தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.அதனை தொடர்ந்து மழையின் தாக்கம் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வழக்கம் போல் வகுப்புகள் தொடங்கியது. மேலும் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது அதன் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மேலும் பொதுவாகவே தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் பண்டிகைகள்,சிறப்பு பண்டிகை மற்றும் சுகந்திர போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் என முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகின்றது.அந்த வகையில் தற்போது கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள தக்கலை ஞான மாமேதை பீரப்பா ஆண்டு விழா வரும் பிப்ரவரி ஆறாம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது.

அதனால் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் மார்ச் 11 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.