தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு பூஜைகள்!!

Photo of author

By Savitha

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது பெருவுடையாருக்கு அபிஷேகம் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்க கூடிய உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களிலிருந்து மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் வருவது வழக்கம்.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் காலை முதல் சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது.

பெருவுடையாருக்கு நல்லெண்ணெய் திரவிய பொடி மஞ்சள் பொடி அரிசி பொடி பால் தயிர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் கொரோனா போன்ற வைரஸ்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். என பக்தர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.