தளபதி பிறந்த நாளையொட்டி லியோ படத்தின் புதிய அப்டேட்!! 

0
175
On the occasion of the commander's birthday!! Leo Movie New Update!!
On the occasion of the commander's birthday!! Leo Movie New Update!!

தளபதி பிறந்த நாளையொட்டி லியோ படத்தின் புதிய அப்டேட்!!

தளபதி விஜய் அவர்கள் வாரிசு படத்தை அடுத்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வந்த நிலையில் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது படத்தை அக்டோபர் 19ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான  படபிடிப்புகள் சென்னை, ஹைதராபாத் , காஷ்மீர் போன்ற பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தளபதி பிறந்த நாளையொட்டி பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளிவரும் என்று கூறி இருந்த நிலையில் இன்று நள்ளிரவு  12  மணிக்கு சமூக வலைதளத்தில் லியோ பட போஸ்டர் ஒன்றை பட குழு வெளியிட்டது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய்யின் பிறந்த நாளிற்கு திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.பின்னர் தளபதியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை வாழ்த்தி அவர்களது சந்தோசத்தை வெளிபடுத்தினர்.

மேலும் அவர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சி தரும் விதமாக தளபதி தற்பொழுது நடிக்கும் லியோ படத்தில் இருந்து ஒரு காட்சி வெளியிடப்படும் என்று இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

அதனால்  தளபதியின்  பிறந்த நாளான இன்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டு இருகின்றனர்.

பல முன்னணி நடிகர்கள் இதில் நடிப்பதால் இந்த திரைப்படம்  ரசிகர்களின் எதிர்பார்ப்பு முழுவதையும் பூர்த்தி செய்யும் என்று படக்குழு திட்டவட்டமாக கூறியுள்ளது.

இதற்கான  ஒரு முன்னோட்டமாக அந்த காட்சி அமையும் எனவும் கூறப்படுகிறது. இதற்கிடைய இன்று படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டது இதனை தளபதியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள  நா ரெடி பாடலின் காட்சிகள் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K