ஒரு பக்கம் அதிமுக அரசியல் ஆலோசகர் பதவி! மறுபக்கம் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்! முன்னாள் அமைச்சர் பன்ருட்டியை பந்தாடும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்!

0
152
On the other hand, the post of AIADMK political advisor! The other side is removed from the basic membership! Former Minister Panruti OPS and EPS!
On the other hand, the post of AIADMK political advisor! The other side is removed from the basic membership! Former Minister Panruti OPS and EPS!

ஒரு பக்கம் அதிமுக அரசியல் ஆலோசகர் பதவி! மறுபக்கம் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்! முன்னாள் அமைச்சர் பன்ருட்டியை பந்தாடும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்!

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக ஒற்றை தலைமை என்ற விவகாரம் எப்பொழுது ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டது. அதிமுகவே இரண்டு அணிகளாக பிரிந்து விட்டது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமனம் செய்தனர். இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தான் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

இருப்பினும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வழக்கு தொடுத்து தான் வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் அதிமுகவின் மூத்த அரசியல்வாதியுமான மற்றும் முன்னாள் அமைச்சரான பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள்  பழனிச்சாமியை எதிர்த்தும், ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்தும் வந்தார். இவ்வாறு இருக்கையில் ஓ பன்னீர்செல்வம் இன்று பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அதிமுக அரசியல் ஆலோசகராக நியமனம் செய்தார். இவருக்கு பதவி வழங்கி நியமனம் செய்த சில நிமிடங்களிலேயே எடப்பாடி பழனிச்சாமி அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்வதாக கூறினார்.

தற்பொழுது இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்ஜிஆர் காலத்தில் இருந்து அவர் இருப்பதால் அதிமுக இடையே அவர் மீது பெரும் மரியாதை உள்ளது. இவ்வாறு இருக்கையில் அடிப்படை உறுப்பினர் என அனைத்து பொறுப்புகளிலும் இருந்து எடப்பாடி பழனிச்சாமி, பண்ருட்டி ராமச்சந்திரனை நீக்கியது கட்சி நிர்வாகிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleஇந்த பகுதிகளுக்கு இனி குடிநீர் விநியோகம் இல்லை! மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு!
Next articleஇனி 8 பேர் இல்லை 32 பேர் வாட்ஸ்அப்பின் புதிய அம்சம்:!!