பெட்ரோல் பங்கில் வேலை.. உலக அழகியுடன் நடித்த டாப் ஹீரோவின் பரிதாப நிலை!!

Photo of author

By Gayathri

தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் நடித்த படங்களின் மூலம் பெண்களின் மனதை கவர்ந்தவர் என்றும் கூறலாம். நடிகர் அப்பாஸ் ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித் குமார் போன்ற முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் சினிமாவில் சிறந்து விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவருக்கான பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து படம் நடிக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

செய்யாறு பாலு நடிகர் அப்பாஸ் குறித்து கூறுவதாவது :-

அப்பாஸ் முதலில் மாடலாக அறிமுகமானவர். மாடலாக இருந்த அப்பாஸ் திடீரென தமிழ் சினிமா துறையில் ஹீரோவாக நுழைந்தார். இவர் தமிழ் சினிமாவில் “காதல் தேசம்” என்ற படத்தில் தான் முதன் முதலில் நடித்தார். தனது முதல் படத்திலேயே அனைவரது மனதையும் வென்றார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு பல படங்களில் வாய்ப்புகள் தேடி வந்தன. அதிக படங்களில் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிகர் அப்பாஸ் நடித்துள்ளார். மேலும் இவர் அதிகமாக படத்தில் இரண்டாவது ஹீரோவாகவே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அழகி ஐஸ்வர்யா ராயுடனும் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் அந்த சமயத்தில் ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பலரும் வருத்தப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழ் சினிமா துறையை பொறுத்தவரையில் பெரும்பாலான ஹீரோக்கள் சினிமா பின்புலத்துடனே நுழைந்துள்ளனர். ஆனால் நடிகர் அப்பாஸ் அவ்வாரி இல்லை என்றும் செய்யாறு பாலு குறிப்பிடுகிறார்.

அப்பாஸ்க்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இருந்த பொழுது ஆடம்பரமாக வாழ்ந்தவர். பட வாய்ப்புகள் குறைய குறைய ஒரு சாதாரண வாழ்க்கைக்குள் நுழைய ஆரம்பித்துள்ளார். இதன் பிறகும் சினிமா துறையில் இருந்தால் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று பயந்து தன் நண்பன் நியூசிலாந்திற்கு அழைத்தவுடன் தன் குடும்பத்தோடு சென்று பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துள்ளார்.