மீண்டும் இம்மாநிலத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கா! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
கொரோனா தொற்றானது கடந்த ஆண்டு முதல் முடிவில்லா நிலையில் பரவி வருகிறது.சென்ற ஆண்டு இந்த கொரோனா தொற்றின் முதல் நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியா நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அந்தவகையில் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அவ்வாறு மக்கள் கட்டுப்பாட்டை கடைபிடித்ததால் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.
அதன்பின் முழு ஊரடங்கை தளர்த்தி மக்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்.மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்ததும் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.அதனால் கொரோனாவானது 2-வது அலையாக உருமாறி அதிகளவு பரவ ஆரம்பித்தது.நமது இந்தியாவானது இந்த கொரோனாவின் 2 வது அலையில் அதிகப்படியான உயிர்களை இழந்துள்ளோம்.
கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முடியாமல் தொற்று அதிகமுள்ள மாநிலங்கள் மக்கள் நலன் கருத்தி முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.அந்தவகையில் தமிழ்நாட்டில் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அவ்வாறு அமல்படுத்துவதன் மூலம் தொற்றின் பாதிப்பை குறைக்க முடியும்.தமிழ்நாட்டை அடுத்து புதுச்சேரியில் தற்போது புதிதாதக 445 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
ஓர் நாளில் மட்டும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மொத்தமாக கொரோனா தொற்றால் 5,575 பேர் உயிரிழந்துள்ளனர்.தற்பொழுது புதுச்சேரியில் தொற்று எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருவதால் மீண்டும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக சுற்றுவட்டாரங்கள் கூறி வருகின்றனர்.அதுமட்டுமின்றி தொற்றை கட்டுபடுத்த அரசாங்கம் கூறும் நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.மக்கள் அனைவரும் அச்சமின்றி கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.அதுமட்டுமின்றி அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்ல வேண்டும்.அத்தோடு அனைவரும் முகக்கவசம் அணிந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.