ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு!! ரேஷன் கார்டுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!!
ரேஷன் கார்டு மூலம், மக்கள் பெரும் பயனடைந்து வருகிறார்கள். இலவச அரிசி, மலிவு விலையில் உணவு பொருட்கள் போன்றவை ரேஷன் கார்டு மூலம் மக்கள் பெற்று வருகின்றனர். மேலும் ரேஷன் கார்டுகளில் பல்வேறு புதிய முயற்சிகளை அரசு மேற்கொள்கிறது.
ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு முறை கொண்டு வந்துள்ளது. சிறிய வகை சிலிண்டர்களை ரேஷன் கடைகளில் கொண்டு வருவது, போன்ற திட்டங்களை அரசு மேற்கொண்டுள்ளது. தற்போது மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு நன்மைகளை பெற முடியும்.
இதன் மூலம் மக்கள், எந்த மாநிலத்திலும், எந்த ரேஷன் கடைகளிலும், ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதை ஆன்லைன் மூலமாகவும் செய்யலாம். இல்லையென்றால் ரேஷன் கடைகளில், ஆதார் அட்டை, ரேஷன் கார்டின் நகல் மற்றும் குடும்பத்தலைவரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை கொடுத்து, ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவு, சரி பார்க்கப்பட்டு, ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு பல மாதங்களாக அவகாசம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் பல ரேஷன் கார்டுகள் தற்போது வரை ஆதார் எண்ணை இணைக்கப் படாமலேயே உள்ளது. தற்போது இந்த கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்குள் ரேஷன் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்காத ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு, பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.