ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் :  முதல்வர் இன்று ஆலோசனை

0
137

நியாயவிலை கடைகளில் கொடுக்கப்படும் பொருட்களை இடம் பெயர்ந்து வாழும் மக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்காக ,ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்க எளிதாக வகையில் இந்த திட்டமானது அமையும்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சோதனை முறையில் இந்த திட்டத்தை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி அமல்படுத்த போவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திட்டத்தினை குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது .அதில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அமைச்சருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleஹரிவன்ஸ் குறித்து சரத்பவார் வேதனை!இதுபோன்ற அவை தலைவரை ஐம்பதுக்கு ஐம்பது ஆண்டுகால அரசியலில் கண்டதே இல்லை என விமர்சனம்!
Next articleஇந்தியாவில் ஒரே நாளில் 83,347 பேர் பாதிப்பு: 1,085 பேர் உயிரிழப்பு!