நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: முக ஸ்டாலினுக்கு சவால் விட்ட பாஜக பிரமுகர்

Photo of author

By CineDesk

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் திமுக இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது

இந்த நிலையில் இந்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள எந்த ஒரு தனிநபருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதாக நிரூபித்தால் ரூபாய் ஒரு கோடி பரிசு தர தயார் என பாஜக பிரமுகர் ஒருவர் போஸ்டர் அடித்து சவால் விட்டுள்ளார்

நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஒருவர் இந்த அதிரடி சவாலை வெளியிட்டுள்ள நிலையில் இந்த சவாலை ஏற்று இந்திய குடியுரிமை சட்டத்தால் பாதிக்கப்படும் நபர் என ஒருவரை ஆதாரமாகக் காட்டி, ரூபாய் ஒரு கோடியை பெற முக ஸ்டாலின் தயாரா? என்றும் பாஜகவினர் சமூக வலைத்தளங்கள் மூலம் சவால் விட்டு வருகின்றனர் இந்த சவாலை திமுக தலைவர் முக ஸ்டாலின் ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்