எலியை பிடிப்பதற்கு  ஒரு கோடி ரூபாய் சம்பளம்! நகர நிர்வாகம் வெளியிட்ட புதிய வேலை வாய்ப்பு!

எலியை பிடிப்பதற்கு  ஒரு கோடி ரூபாய் சம்பளம்! நகர நிர்வாகம் வெளியிட்ட புதிய வேலை வாய்ப்பு!

பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வனிதா.இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.கடந்த அக்டோபர் மாதம் லேசாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.அதனால் அவரை பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

மேலும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.வனிதாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது அப்போது அவருக்கு எலி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.இந்நிலையில் அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் எலி தொல்லை அதிகம் உள்ளது.

சுமார் இரண்டு கோடி எலிகள் வசிக்கும் இடமாக நியூயார்க் நகரம் மாறி வருகின்றது.மேலும் வீடு ,சூப்பர் மார்க்கெட் ,ரெஸ்டாரண்ட்டுகள் ,நட்சத்திர ஓட்டல் போன்ற அனைத்து இடங்களிலும் எலிகள் கூட்டம் கூட்டமாக தொல்லை செய்து வருகின்றது.

எலிகளை ஒழுக்க நியூயார்க் நகர நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.ஆனால் அவை எதுவும் பயனளிக்கவில்லை.கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் எலி தொல்லை 70 சதவீதம் அதிகரித்துள்ளது.

மக்களிடம் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான எலித் தொல்லை புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.அதனால் எலிகளை கட்டுப்படுத்த புதிய வேலைத் திட்டத்தை நியூயார்க் நகர மேயர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எலிகளை கட்டுப்படுத்தவும்  அவற்றை கொன்று அப்புறப்படுத்தவும் ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதற்கான தகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலையில் சேர ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும்.எலிகளை துரத்துவதற்கு நல்ல உடல் ஆற்றலும் ,கொலையாளிக்கான நேர்த்திகளும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

திட்டத்தின் இயக்குநருக்கு ஆண்டு சம்பளம் ஒரு கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மீண்டும் பிளேக் நோய் தோற்று வராமல் இருக்க நியூயார்க் நகர நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.