பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான மாணவி

0
111

பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான மாணவி

பெண் குழந்தைகள் தினம் என்பதால் அதனை பெருமை சேர்க்கும் வகையில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரை ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பள்ளியில் நேற்று ஒரு நாள் மட்டும் தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்து வருகைப்பதிவேட்டில் காவியா என்ற 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவி கையெழுத்திட்டார். அதன்பிறகு ஆசிரியர்களுடன் காவியா ஆலோசனை நடத்தினார் . பிறகு அனைத்து வகுப்புக்கு சென்று ஆய்வு செய்தார் .

காவியா சக மாணவ மாணவிகள்ளுடன் பழகும் மனபான்மை, குணத்தில் சிறந்து விளங்கியாதல் இவருக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தார்.

Previous articleநன்றாக விக்கெட் கீப்பிங் செய்யும் ராகுல்:பறிபோகிறதா ரிஷப் பண்ட்டின் இடம் ?
Next article2020 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு