நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு!

Photo of author

By Sakthi

நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் அனைத்து விதமான பணியாளர்களுக்கும் விடுமுறை தினங்களில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டிருக்கிறது. கூட்டுறவு சங்க பதிவாளர் அனைத்து மண்டல இணைப்பதிவாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

இதுதொடர்பாக கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் நியாய விலை கடை விடுமுறை நாட்களில் ஒரு நாள் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தந்த மாவட்டங்களில் அருகில் இருக்கின்ற தமிழக கூட்டுறவு ஒன்றியம் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களில் இந்த பயிற்சியை நடத்துவதற்கும் தமிழக கூட்டுறவு மத்திய மேலாண்மை இயக்குனரை கேட்டுக் கொண்டிருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.

அந்தப் பயிற்சியில் தமிழக கூட்டுறவு மேலாண்மை இயக்குனர் செயல் திட்ட பணி பயிற்சியாளர்களின் பட்டியலை தயார் செய்து தங்களுடைய மண்டலத்தில் பணியாற்றும் அனைத்து நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் எந்தவிதமான தடையுமின்றி பயிற்சி அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.