நோய்த்தொற்று பரவல்! அதிரடி உத்தரவை மாவட்ட ஆட்சியர்!

0
58

நோய்த்தொற்று பரவல் சிறிது சிறிதாக குறைந்த நிலையில் தவறுகளை தமிழக அரசு அறிவித்தது.பொதுமக்களும் நோய்த்தொற்று குறைந்த நிம்மதியில் எழுந்து வந்தார்கள் அதோடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் தொழில் நிறுவனங்களும் மற்றும் சிறு, குறு தொழில் செய்பவர்களும் மகிழ்ச்சியில் இருந்தார்கள் சிறிது சிறிதாக இயல்புநிலை திரும்பத் தொடங்கியது.இதற்கிடையில் நோய்தொற்று பரவலின் மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்தது.

அதோடு இந்தியாவில் சமீப காலமாக நோய்த்தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு ஒருநாள் நோய்த்தொற்று பரவல் எண்ணிக்கையையும் அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் அடிப்படையில் தமிழக அரசு மாவட்ட நிர்வாகங்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதாவது மாவட்ட நிர்வாகங்கள் அந்தந்த பகுதியில் இருக்கின்ற சூழ்நிலைக்கு ஏற்றவாறு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி உத்தரவிட்டு இருக்கிறார். அதனடிப்படையில் அத்தியாவசிய கடைகளைத் தவிர்த்து மற்ற கடைகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தேநீர் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

திருமணங்களில் 50 நபர்களும், இறுதிச்சடங்கில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். சுற்றுலாத்தலங்கள், அருங்காட்சியகம், பூங்காக்கள், உள்ளிட்ட இடங்கள் இயங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகா மற்றும் தமிழகத்தில் சாவடிகள் மூலமாக ஈரோடு வருபவர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட நோய்த்தொற்று பரிசோதனை சான்றிதழ்கள் மற்றும் இரண்டு முறை தடுப்பூசி சேர்த்துக்கொண்ட சான்றிதழுடன் வருகை தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் பால், மருந்தகம் மற்றும் மளிகை கடைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளுக்கும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் முற்றிலுமாக தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.