“நடிகர் மீது இருந்த ஒரு தலை காதல்!! பாடகி சுசித்ரா பேட்டி!!”

” பிரபல பாடகி சுசித்ரா,”ஜேஜே, ஆய்த எழுத்து, கோ போன்ற படங்களில் நடித்துள்ளார்”. இவர் ‘யாரடி நீ மோகினி’ திரைப்படத்தில் தனுசுக்கு நண்பராக நடித்துள்ள ‘கார்த்திக்’ என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் பிரபல ‘RJ( ரேடியோ ஜாக்கி)’யும் ஆவார். இவர் ‘தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்’.

சில நாட்களுக்கு முன் இவர் தனியார் யூடுயுப் சேனலில் பேட்டி ஒன்றில் பேசும்போது, “ஆயுத எழுத்து படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தேன். அதை என் வாழ்நாளில் மறக்க இயலாது” என்றார். அப்பட ஷூட்டிங் போது, நான் அவரைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். அவர் மிகவும் அழகாக இருப்பார். என் கண்களில் வெளிவந்த “ரொமான்ஸை பார்த்த மணிரத்தினம் சார் என்னை பயங்கரமாக திட்டி உள்ளார்!” ஆனாலும் எனக்கு அவர் மீது அநேக காதல். ஒரு சீனில் அவர், பயங்கரமாக பேசிக் கொண்டிருப்பார். அவர் பின்னால் நாங்கள் சோகமாக இருக்க வேண்டும். ஆனால், ‘சூர்யாவை பார்த்து என்னால் சோகமாக இருக்க முடியவில்லை’. உடனே ரத்னம் சார் என்னை தலையை குனிய வைத்து அந்த ஷாட்டை எடுத்தார்..

“நடிகர் சூர்யாவின் மீது இருந்த காதலை நான் அவர் வீட்டுக்கு சென்று மாப்பிள்ளை கேட்டு விடலாம்” என்றெல்லாம் எண்ணினேன். ஆனால் அவர்கள் பெரிய சினிமா குடும்பம். மேலும் அவரது அப்பா மீது இருந்த பயம் காரணமாக என் காதலை நானே, ‘என் மனதில் குழி தோண்டி புதைத்து விட்டேன்’ என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.