கள்ளக்குறிச்சி அருகே சாலை‌ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

Photo of author

By Savitha

கள்ளக்குறிச்சி அருகே சாலை‌ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

லாரி மற்றும் கரும்பு டிராக்டர் போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்லும் போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்‌ பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி ‌மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம்‌ கிராமத்தைச் சேர்ந்த மணி கள்ளக்குறிச்சியில் ஜிகர்தண்டா கடை‌‌ வைத்து நடத்தி வருகிறார்.

வழக்கம்போல் கடையை திறப்பதறக்காக மணி தனது வீட்டில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று‌ கொண்டிருந்தார். அப்போது அரியபெருமானூர் என்ற இடத்தில் லாரி‌ மற்றும் கரும்பு டிராக்டர் ‌போட்டி போட்டு கொண்டு சென்றதில் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

அக்கம்பக்கத்தினர் உடனடியாக மணியை மீட்டு‌ கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மேலும் இறந்துபோன மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது விபத்திற்கான வாகனம் குறித்து போலீசார் தீவி‌ர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி பகுதியில் லாரி , கரும்பு டிராக்டரால் போக்குவரத்து நெரிசல் விபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.