மீனவர் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி !!

0
148

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ,படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தால், இச்சம்பவம் அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை பெய்து வருவதாலும், காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக கடலில் மீன்பிடிக்க மீனவர் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெருமணல் பகுதியில் வசித்து வரும் மீனவர் மைக்கேல் என்பவர் ,தனது நண்பர்களுடன் நாட்டுப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுயுள்ளார்.

அப்பொழுது கடல் சீற்றத்துடன் இருந்ததால், பாதி வழியிலேயே படகு கடலில் கவிழ்ந்தது

மைக்கேல் மற்றும் அவரது நண்பர்கள் தப்பிக்க,கரையை நோக்கி நீந்தத் தொடங்கினார். ஆனால், மைக்கேல் என்பவர் அதிகமாக கடல்நீர் குடிப்பதனால் நீந்த முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற நண்பர்கள் காப்பற்ற முயற்சித்தபோதும் ,அவரை மீட்க இயலவில்லை என கரையேறி மீனவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவியது.

Previous articleசூர்யாவை மீண்டும் சர்ச்சையில் சிக்க வைக்கும் காயத்ரி ரகுராம்!
Next article10 கோடி கொரோனா தடுப்பூசி! இந்தியா ரஷ்யா புதிய ஒப்பந்தம்!