ஒரு லட்சத்தை எட்டும் ஒமைக்ரான் தொற்று! ஐஐடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் உருமாறி பரவி வருகிறது. மக்கள் அவற்றிலிருந்து மீண்டும் நடைமுறை வாழ்க்கைக்கு தொடங்கும் பொழுது மீண்டும் அதேதொற்று வேறு ஒன்றாக உருமாறி மக்களை தாக்குகிறது. இதனால் மக்கள் மீண்டு நடைமுறை வாழ்க்கைக்கு திரும்ப பெருமளவு வேதனை அடைகின்றனர். பொருளாதார ரீதியாகவும் மக்கள் கஷ்டப்படும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். முதல் அலை இரண்டாம் அலை முடிந்து மூன்றாவது அலை டிசம்பர் மாதத்திற்கு முன்பு வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். ஆனால் அதற்குள் கரோனா தடுப்பூசி ஆனது நடைமுறைக்கு வந்து மக்கள் செலுத்தி கொண்டதால் தொற்றின் பாதிப்பு அதிக அளவு சரிவடைந்தது.
அதனால் மூன்றாவது அலை அடுத்த வருடம் இறுதியில் வரும் என்று கூறினர்.அதற்குள்ளேயே தற்பொழுது தென்னாப்பிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் அதி வேகத்தில் பரவி வருகிறது. தொற்று பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். அவ்வாறு ஆராய்ந்ததில் ஐஐடி விஞ்ஞானனி சந்திர அகர்வால் தற்போது அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளார்.அவர் கூறியதாவது, இந்த ஒமைக்ரான் தொற்றானது வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது அலையாக உருமாறும் என்று கூறியுள்ளனர். அவ்வாறு பிப்ரவரி மாதம் அன்று ஒரு நாளில் இத்தொற்றுக்கு பாதிக்கப்படும் எண்ணிக்கை ஒரு லட்சம் வரை எட்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய வகை வைரஸ் தொற்றானது அதிவேகத்தில் பரவக்கூடிய தன்மை கொண்டது. டெல்டா வகை கொரோனா தொற்றை விட இந்த ஒமைக்ரான் வகை தொற்றுக்கும் டெல்டா வகை தொற்றுக்கும் அதிகளவு வேறுபாடுகள் உள்ளதாக கூறியுள்ளனர்.இவ்வாறு ஐ.ஐ.டி விஞ்ஞானி கூறிய ஆய்வின் முடிவை கண்ட மக்கள் பெருமளவில் அச்சத்தில் உள்ளனர். இவர் கூறுவதை பார்க்கும்பொழுது பிப்ரவரி மாதத்திற்குள் மீண்டும் மூன்றாவது அலை ஏற்பட்டு அதிக தீவிரம் காட்டி ஊரடங்கு போடப்படும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.