தமிழகத்தில் மேலும் ஒரு புதிய மாநகராட்சி! அரசாணை வெளியீடு!

0
235

தமிழகத்தில் மக்கள்தொகை, வருவாய், வளர்ச்சி பொறுத்து மாநகராட்சி தரம் உயர்த்தப்படும். இதுபோன்ற 15 மாநகராட்சிகள் உள்ளன. ஆவடி மாநகராட்சி நிறுவனங்களாக ஜூன் 19, 2019 அன்று மேம்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் மொத்தம் 14 நகராட்சிகள் இருந்தன. கடைசியாக 2014 லில் தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. பின்பு 2019 லில் இந்த வருடம் நாகர்கோவில், ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியீடு செய்தது. அதை தொடர்ந்து ஆவடி நகராட்சியாக உயர்த்தப்படும் என சட்டசபையில் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார்.

அதை தொடர்ந்து அமைச்சர் வேலுமணி முன்னதாக அறிவித்தது போல இன்று சட்டசபை கூடியதும் அமைச்சர் வேலுமணி ஆவடி நகராட்சியாக உயர்த்த்படும் சட்ட மசோதாவை சட்ட சபையில் தாக்கல் செய்தார்.இதை பரிசீலித்த தமிழக அரசு ஆவடியை உடனடி மாநகராட்சி அறிவித்து அரசாணை வெளியீடு செய்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆவடி மிகவும் சிறிய பரப்பை கொண்டிருந்தாலும் அதன் அடர்த்தி மக்கள் நெருக்கடி மக்களின் முன்னேற்றம்,அரசின் வருவாய் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆவடி நகராட்சி அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தது போல ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

நாகர்கோவில் மற்றும் ஓசூர் தொடர்ந்து இன்று ஆவடி 15வது மாநகராட்சி அந்தஸ்தை பெற்றது.அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்து தமிழக அரசுபரிசீலித்து உடனே மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டது.

Previous articleகுமாரசாமி ஆட்சி நீடிக்குமா? 1.30 மணி வரை ஆளுநர் கெடு!
Next articleTNPL 2019 கிரிக்கெட் போட்டி ஆரம்பம்! திண்டுக்கல் டிராகன் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இடையேயான முதல் ஆட்டத்தில் வெல்ல போவது யார்? Dream 11பரிந்துரைகள்