தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் இரயில் இயக்கம்… இரயில்வே வாரியம் திட்டம்!!

Photo of author

By Sakthi

தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் இரயில் இயக்கம்… இரயில்வே வாரியம் திட்டம்!!

Sakthi

தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் இரயில் இயக்கம்… இரயில்வே வாரியம் திட்டம்…
தமிழகத்தில் புதிய வழித்தடத்தில் மேலும் ஒரு வந்தே பாரத் இரயிலை இயக்க இரயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் இரயில் இந்தியாவின்.முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது வந்தே பாரத் சென்னை – கோவை ஆகிய மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் சென்னையில் இருந்து மைசூருக்கும் வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மேலும் தமிழகத்தில் புதிதாக வந்தே பாரத் இரயில் இயக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்தே பாரத் இரயிலை இயக்குவதற்கு இரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சென்னையிலிருந்து இயக்கப்படும் வந்தே பாரத் இரயில் மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்கள் வழியாக திருநெல்வேலிக்கு சென்று அடையும்.
சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு இடையே தற்பொழுது 10 மணி நேரம் இடைவெளியில் விரைவு இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து வந்தே பாரத் இரயில் இயக்கப்படுவதால் 10 மணிநேரம்  பயணம் 8 மணி நேரமாக குறையும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் இரயில் சென்னை மாவட்டத்திற்கு மதியம் 2 மணிக்கு சென்றடையும். மேலும் சென்னை மாவட்டத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் இரயில் இரவு 11 மணிக்கு திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்றடையும். சென்னை- திருநெல்வேலி மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் இரயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் நின்று செல்லும்.
சென்னை – திருநெல்வேலி மாவட்டங்களுக்கு இடையேயான வந்தே பாரத் இரயில் சேவையை பிரதமர் மோடி அவர்கள் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி கொடி அசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். இதனால் சாதாரண விரைவு இரயில்களில் பயணிக்கும் இரயில் பயணிகள் அனைவரும் வந்தே பாரத் இரயிலில் பயணிக்க ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.