கடந்த 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒன் பிளஸ் நிறுவனம் சாம்சங்,ஆப்பிள் போன்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி விட்டு தனக்கென ஒரு இடத்தை செல்போன் மார்கெட்டில் பிடித்துள்ளது.மேலும் இந்த நிறுவனம் நெவர் செட்டில் என்ற டேக் லயனுடன் தரமான போன்களை உருவாக்கி வருகின்றனர்.இவர்கள் திட்டத்தின் கீழ் இம்மாதம் ஜூலை 2 ஆம் தேதி பட்ஜெட் விலையில் டிவியும்,ஜூலை 10 பட்ஜெட் விலையில் போனும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து கடந்த வருடம் ஆண்ட்ராய்டு Q சீரிசை வெளியிட்டனர். அதிக விலையால் அது போதிய வரவேற்பை பெறவில்லை.இந்தியா டிவி மார்க்கெட்டில் பெரும் வாடிக்கையாளர்களை கவர்ந்த பிராண்ட் என்றால் அது சாம்சங்,எல்.ஜி, சோனி போன்றவையாகும்.மேலும் இணைய மார்க்கெட்டை எடுத்துக்கொண்டால் அதில் ஜியோமி மற்றும் வி.யூ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தற்பொழுது இவர்களுக்கெல்லாம் போட்டியாக தான் ஒன் பிளஸ் தனது 3 புதிய வகை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இரண்டு மாடல்கள் Y சீரிஸில் அறிமுகப்படுத்தப்பட்டது.ஹெச்டி தரத்தில் 32 இன்ச் டிவியின் விலை ரூ.12999 ஆகும்.முழு ஹெச்டி தரத்தில் 43 இன்ச் டிவியின் விலை ரூ.22999 மேலும் U சீரிஸில் 55 இன்ச் உடைய 4K மாடல் டிவியின் விலை 49999 ரூபாய் ஆகும்.இந்த ஸ்மார்ட் டிவி ஜூலை 5( நேற்று) முதல் அமேசானில் விற்பனைக்கு வந்தது.விரைவில் ஷோரூமிற்கும் விற்பனைக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.