நினைத்தது ஒன்று! நடந்தது ஒன்று! கோமாளி படத்தில் ஏற்பட்ட குளறுபடி!!

Photo of author

By Gayathri

‘எவர்கிரீன் படங்களுள் ஒன்று “கோமாளி”‘. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தனது முதல் படமான கோமாளியில் இளைஞர்களையும், குழந்தைகளையும் கவரும் வண்ணம் இப்படத்தில் பணி புரிந்திருப்பார். இப்படம் அவர் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அவர், “கோமாளி படத்திற்காக பிரதீப் முதலில் ஆர். ஜே. பாலாஜியை” தான் அணுகியுள்ளார். இவர் அணுகிய போது ஆர்.ஜே. பாலாஜி நடிக்க ஆரம்பிக்கவில்லை. அதனால் ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார். அதன் பின் தான் ஜெயம் ரவியை நடிக்க வைத்தனர். ஜெயம் ரவியின் நடிப்பில் இப்படம் வெளியாகிய பின்னர் அப்போது பெருமளவில் வெற்றி கண்டது. ‘ஜெயம் ரவியில் கேரியரிலும் இந்த படம் மிகவும் முக்கியமானது’. அதற்கு முன் அவர் நடித்த சில படங்கள் தோல்வியுற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் வெற்றி கண்ட பின் ஆர். ஜே. பாலாஜி அவர்கள் ஒரு பேட்டியில், இப்படத்தில் ‘என்னால் நடிக்க முடியவில்லை’ என்றாலும் இப்படத்தின் “வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என பேசி உள்ளார். அதன்பின் தான் மூக்குத்தி அம்மன் படத்தை இவர் இயக்கி நடித்துள்ளார்.

கோமாளி படமானது லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும், 60 கோடி வசூலை தாண்டியது. இப்படம் வெளியான நிலையில், அது “திருட்டுப் படம்” என சர்ச்சையும் எழுந்தது. இது ‘பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கதை’ எனவும் பிரச்சனை ஏற்பட்டது. இதற்காக “பிரதிப், பார்த்திபனின் உதவி இயக்குனரான கிருஷ்ணமூர்த்திக்கு நஷ்ட ஈடாக பத்து லட்சம் தொகை வழங்கினார்” என்பதும் குறிப்பிடத்தக்கது.