குழந்தையின் மருத்துவ தேவைக்கு ஒரே வாரத்தில் சேர்ந்த பணம்! இவ்வளவு கோடிகளா?
இன்றைய கால கட்டத்தில் குழந்தையை பெற்றெடுப்பது கூட சுலபம் தான். ஆனால் அந்த குழந்தை வளர வளர ஆகும் செலவுகளுக்காக நாம் தனியாக சம்பாரிக்க வேண்டும். டிஜிட்டல் இந்தியா அந்த அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. இப்போதெல்லாம் குழந்தைக்கு என்ன வியாதிகள் வருகிறது என்றே தெரியாமல் பெற்றோர் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
வரும் ஒவ்வொரு வியாதியும் புதிது புதிதாக வருகிறது. அந்த காலத்து மனிதர்கள் ஏழு, எட்டு குழந்தைகளை பெற்று எப்படி வளர்த்தார்களோ என்று என்னதான் தொன்றுகிறது. ஒவ்வொரு மருந்தும் இலட்ச கணக்கில் விற்பனையாகிறது.
இப்போது கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஃபிக் மற்றும் மரியம்மா தம்பதியின் குழந்தை முகமது ஆகும். இந்த குழந்தைக்கு ஒன்றரை வயதாகிறது. இந்த குழந்தைக்கு மிக அரிதான நோயான தண்டுவட தசை சிதைவு நோய் ஏற்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சிகிச்சைக்காக உலகின் மிக விலை உயர்ந்த மருந்தான சொல்ஜென்ஸ்மா மருந்தை வாங்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். மேலும் இந்த மருந்தின் விலை பதினெட்டு கோடி என்றும் கூறினர். இதன் காரணமாக உள்ளூர் எம்எல்ஏ ஒரு தனி வங்கி கணக்கு ஆரம்பித்து ஒரு குழுவையும் ஆரம்பித்தார். இதில் அந்த குழந்தைக்கு தேவையான நிதி திரட்டப்பட்டது.
உள்ளூரிலும் வெளிநாட்டு வாழ் மக்களும் ஒரே வாரத்தில் 18 கோடி பணத்தை அதில் போட்டுள்ளனர். தற்போது வங்கி அதிகாரிகள் ஒரே வாரத்தில் குழந்தையின் சிகிச்சைக்காக 18 கோடி பணம் சேர்ந்து விட்டதாக அறிவித்தனர்.