ADMK: அதிமுக இரண்டாக பிரிந்த போதே வாக்கு வங்கியும் சிதறிவிட்டது. தற்சமயம் நடந்து வரும் பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகிறது. இப்படி இருக்கையில் மீண்டும் டெபாசிட் இழக்காமலிருக்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் சசிகலா ஓபிஎஸ் உள்ளிட்ட வரை உள்ளிலுக்கலாம் என்று எடப்பாடிக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை. இப்படி இருக்கையில் சமீபத்தில் இரட்டை இலை மற்றும் உற்கட்சி சம்பந்தமான வழக்குகளில் தேர்தல் ஆணையம் தலையிடலாம் என்ற தீர்ப்பானது ஓபிஎஸ்க்கு சாதகமாக அமைந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மூத்த நிர்வாகிகள் பலரும் மறைமுகமாக எடப்பாடிக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
அதில் ஒன்றுதான் செங்கோட்டையன் எடப்பாடியின் பாராட்டு விழாவை புறக்கணித்தது. பாராட்டு விழாவில் மறைந்த முதல்வர்களின் புகைப்படம் இல்லை என்பது ஊருக்கான காரணம் மட்டுமே, ஆனால் அவரது பெயர் தற்போதைய அமைச்சருக்கு கீழ் வந்தது தான் முக்கிய காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதேபோல மறுநாள் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்திலும் எனக்கு பல வாய்ப்புகள் வந்துள்ளது என்னை நீங்கள் சோதிக்காதீர்கள் , என அறிவுறுத்தியுள்ளார். மேலும் சசிகலா பன்னீர்செல்வம் கூட்டணி வேண்டும் என்பதை நேரடியாக கூறாமல் ஒருங்கிணைந்த அதிமுக வால் தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஓ பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர், செங்கோட்டையன் எம்ஜிஆர் காலத்திலே எம்எல்ஏ ஆனவர். அவர் மீது எந்த ஓர் அதிருப்த்தியும் இல்லை. அதேபோல ஒருங்கிணைந்த அதிமுக வில் நாங்கள் இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேற்கொண்டு விஜய் கட்சி ஆரம்பிப்பது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அரசியல் களத்தில் விஜய் எதை நோக்கி பயணம் செய்கிறார் என்பது மிகவும் முக்கியமான ஒன்று, சாதி மதம் என கடந்து அனைத்தையும் சமமாக விஜய் பார்க்கிறாரா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
அதேபோல அண்ணாமலை மறைந்த முதல்வர் மற்றும் அண்ணாவை அவதூறாக பேசவில்லை ஒவ்வொரு தலைவரும் அவரவர் கட்சியை வளர்க்க பேசுவது இயல்பானம் ஒன்றுதான். மேற்கொண்டு இவ்வாறு அவர் பதில் அளிப்பது பாஜகவுடன் இணக்கத்தில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.