அதிகாரிகள் அலட்சியம்..! ஓஎன்ஜிசி குழாய் உடைந்து பயிர்கள் நாசம்: விவசாயிகள் கலக்கம்!

Photo of author

By Parthipan K

அதிகாரிகள் அலட்சியம்..! ஓஎன்ஜிசி குழாய் உடைந்து பயிர்கள் நாசம்: விவசாயிகள் கலக்கம்!

Parthipan K

ஓஎன்ஜிசி குழாய் உடைந்து சம்பா பயிர்களில் கச்சா எண்ணெய் கலந்த சம்பவம் திருவாரூர் விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், கீழ்எருக்காட்டூரை தேர்ந்தவர் தனசேகரன். இவரது நிலத்தில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓஎன்ஜிசியின் எண்ணெய் குழாய் திடீரென உடைந்து அதிலிருந்த கச்சா எண்ணெய் வெளியேறி சம்பா பயிரில் பரவியது. இதைப் பார்த்த தனசேகரன் செய்வதறியாது திகைத்து போய் இருக்க, சம்பா பயிர்களை பயிரிட்டு உள்ள அடுத்தடுத்த வயல்களுக்கும் கச்சா எண்ணெய் பரவியுள்ளது. சம்பா பயிர் பயிரிட்டு 30 நாட்களே ஆன நிலையில் கச்சா எண்ணெய் கசிவால் மொத்தமும் நாசமாகி உள்ளதாக தனசேகரன் கூறுகிறார்.

நீரோடு கலந்து கச்சா எண்ணெய் செல்லும் நிலையில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் இதுவரை வந்து பார்க்கவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். குழாய் உடைந்து, தண்ணீரோடு கச்சா எண்ணெய்யும் கலந்து வயலில் சென்று பயிர்கள் அனைத்தும் நாசமாக்கிய நிலையிலும், ஓஎன்ஜிசி அதிகாரிகள் இதுவரை வந்து பார்க்கவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.