டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சமாளிக்க வெங்காய அரசியலை கையிலெடுத்த மத்திய அரசு!

Photo of author

By Parthipan K

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சமாளிக்க வெங்காய அரசியலை கையிலெடுத்த மத்திய அரசு!

விரைவில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் சூழ்நிலையில் எப்படியாவது மக்களைக் கவர்ந்து அங்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக தலைமையிலான மத்திய அரசு களத்தில் இறங்கியுள்ளது. இதனையடுத்து டெல்லியில் வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழ்நிலையில் ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய்க்கு மத்திய அரசே நேரடியாக இறங்கி விற்பனை செய்வதால் இதை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

பெரிய வெங்காயம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதி போன்ற பகுதிகளில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் இங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு வரும் வெங்காய வரத்து குறைந்துவிட்டதால், திடீர் விலை ஏற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசின் நுகர்வோர் துறை புள்ளி விவரங்கள் படி, சில்லறை விலையில் பெரிய வெங்காயத்தின் விலை டெல்லியில் கிலோ ரூ.80 எனவும், மும்பையில் ரூ.70 எனவும், கொல்கத்தாவில் ரூ.50 எனவும், சென்னையில் ரூ.50 முதல் ரூ.60 எனவும் விற்கப்படுகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ பெரிய வெங்காயம் கிலோ ரூ.50 வரை மட்டுமே விற்பனையான நிலையில், திடீரென ரூ.80 வரை உயர்ந்துள்ளது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதற்கிடயே டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில் “ டெல்லி அரசு வெங்காயம் கொள்முதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதனையடுத்து அடுத்த 10 நாட்களில் மக்களுக்கு வெங்காயம் கிலோ ரூ.24க்கு வழங்கப்படும். நியாய விலைக் கடைகளிலும், வீடுகளுக்கே சென்றும் வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு டெல்லி மக்களைக் கவரும் வகையில் மத்திய அரசே வெங்காயத்தை டெல்லி அரசு அறிவித்த விலையைக் காட்டிலும் 2 ரூபாய் குறைவாக நேரிடையாக விற்பனை செய்து வருகிறது.

இதனையடுத்து மத்திய அரசின் நியாய விலைக்கடை நடமாடும் வாகனங்கள் மூலமாக இந்த விற்பனையை மத்திய அரசு நேரடியாக தொடங்கியுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. இதனால் மத்திய அரசின் இந்த வேகத்தை பார்த்து ஆம் ஆத்மி கட்சியினர் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.

வெளிச்சந்தையில் கிலோ வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80-க்கு விற்பனையாகும் நிலையில் மத்திய அரசு ரூ 22 க்கு விற்பதை மக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்த திட்டத்துக்கு மாற்றாக அதை சமாளிக்கும் விதமாக, மத்திய அரசு அதிரடியாக களமிறங்கி மக்களின் செல்வாக்கை பெற்று வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.