சேலம் மாவட்டம் தலைவாசல் காய்கறி சந்தைக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் அதன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
வெங்காயம் உற்பத்தி அதிகமாக நடைபெறும் கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருவதாலும், ஊரடங்கு காரணமாக வெங்காயத்தின் சாகுபடி மற்றும் அதன் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டதனால், வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் கிலோ வெங்காயம் விலை இரு மடங்கு உயர்ந்து விற்கப்படுகிறது. கடந்த வாரம் பத்து ரூபாய்க்கு விற்பனையான வெங்காயம் இன்று கிலோ ரூபாய் 32 வரை விற்பனை செய்யப்படுகிறது.
திடீர் விலை உயர்வால் விற்பனை மந்தமாக உள்ளதாக காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.