சென்ற வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெங்காயத்தின் விலை மிகக் கடுமையாக உயர்ந்தது மொத்த விலையில் ரூபாய் என்பது வரையிலும் சில்லரை விற்பனையில் ரூபாய் 100 வரையிலும் விற்பனை ஆனது. இதனை அடுத்து சின்ன வெங்காயம் விலை படிப்படியாக அதிகரித்து தற்சமயம் கிலோ ஒன்றிற்கு 170 ரூபாய் என்று விற்பனை ஆகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர் ஒட்டன்சத்திரம், போன்ற பல பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் எடுத்து வரப்படுகிறது.
ஆகவே சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்து இருப்பதாக சொல்கிறார்கள். அதேபோல வெளிமாநிலங்களில் இருந்து வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து தற்சமயம் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது ஒரு நாளைக்கு ஐந்து லாரிகளில் சின்னவெங்காயம் ஏற்றி வரப்படுகிறது என்று தெரிவிக்கிறார்கள்.
சுமார் ஒரு மாதத்திற்கு பின்னர் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் இயல்பான நிலைக்கு வரும் என்ற காரணத்தால், அந்த சமயத்தில் விலை குறையலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அதிகபட்சமாக சென்னையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 170 ரூபாய்க்கும், கோயமுத்தூரில் குறைந்தபட்சமாக 120 ரூபாய்க்கும் சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.