டிரம்பை விடுவித்த செனட்சபை! ஜோ பைடன் குற்றச்சாட்டு!

0
67

அமெரிக்காவின் முன்னால் அதிபர் டிரம்ப் செனட் சபையில் இருந்து வெளியேற்றியதன் மூலமாக ஜனநாயகம் தன்னுடைய வலுவை இறந்துவிட்டதாக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டி இருக்கிறார். உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. வைரஸ் பரவலுக்கு இடையிலும் கடந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் அப்போதைய அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப்ஐ எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார் .இதனை ஏற்றுக்கொள்ள இயலாத டிரம்ப் ஆதரவாளர்கள் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி வந்தார்கள்..

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை தூண்டிவிட்டு வன்முறை செய்ததாக முன்னாள் அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தின் மீது செனட்சபை விசாரணை நடத்தியது. ஆனாலும் அவருடைய பதவி நீக்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் விடுவிக்கப் பட்டிருக்கிறார். இந்த நிகழ்வை வரவேற்று டிரம்ப் கருத்தை தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக உரையாற்றிய தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஜனநாயகம் அமெரிக்க நாட்டில் வலுவிழந்து இருப்பதாக தெரிவித்தார். செனட் சபையில் இருந்து ட்ரம்ப் விடுவிக்கப்பட்டு இருந்தாலும் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.