இன்று காலை 11 மணிக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!
கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் பக்தர்கள் அதிகளவு வரும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மற்றும் வைகுண்ட ஏகதாசி அன்று பக்தர்கள் அதிகளவு வருவார்கள்.
அதுபோலவே கடந்த புரட்டாசி மாதமும் பக்தர்கள் அதிகளவு சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்த காரணத்தினால் கூட்ட நெரிசல் அலைமோதியது. அந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த திருப்பதி தேவஸ்தான் சார்பில் டைம் ஸ்லாட் டோக்கன் முறை மீண்டு அமல் படுத்தப்பட்டது. அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும்பொழுது கூட்ட நெரிசல் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் மார்ச் மாதத்திற்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ஆன்லைன் மூலமாக இன்று காலை 11 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. அண்மையில் திருப்பதியில் தங்கும் விடுதிகளுக்கான கட்டணம் பன் மடங்கு உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.